கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியின் மூலம் வார இறுதி நாட்களை சுவையானதாகவும், இனிமையானதாகவும் மாற்றும் கலர்ஸ் தமிழ்
இந்தியா கேட், எஸ்கேஎம் பூர்ணா மற்றும் விம் ஆகிய நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்பை கொண்ட கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சி நவம்பர் 7 ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மதியம் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தமிழ்நாட்டின் மிக இளமையான பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், தனது புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பின் மூலம் உணவு ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க தயார் நிலையில் உள்ளது. இந்தியா கேட், எஸ்கேஎம் பூர்ணா மற்றும் விம் ஆகிய நிறுவனங்களது ஸ்பான்சர்ஷிப் உடன் நடத்தப்படும் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியானது, புகழ்பெற்ற சமையற்கலை விற்பன்னரான டாக்டர். செஃப் தாமு அவர்களது பங்கேற்போடு சுவையானதொரு சமையல் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் நவம்பர் 7 ஆம் தேதியன்று முதன்முறையாக ஒளிபரப்பை தொடங்கும் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியானது, ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ரசித்து, ருசித்து உணவருந்தும் உணவு ரசிகர்களுக்கு முழுமையான விருந்தாக இந்த நிகழ்ச்சி நிச்சயம் இருக்கும். இந்த நிகழ்ச்சியின் முதன்மை முகமாக டாக்டர் செஃப் தாமு இருக்கின்றபோது ஒரு சிறப்பு பிரிவினை செஃப் ஸ்ரேயா அட்கா மற்றும் கலகலப்புக்கு பஞ்சமில்லாத ஆர்.ஜே. ஸ்ரீரஞ்சனி தொகுத்து வழங்குகிறார்கள். ஒவ்வொரு எபிசோடிலும் அற்புதமான சுவை கொண்ட உணவுகளை டாக்டர். செஃப் தாமு இந்த ஒளிபரப்பின் மூலம் உங்கள் வீடுகளுக்கே அவற்றை கொண்டு வருகிறார்.
இந்த ஒளிபரப்பின் மூலம் இந்த ரெசிப்பிக்களின் அடிப்படையில் வீட்டிலேயே இந்த உணவுகளை எளிதாக சமைத்து உண்டு மகிழலாம். 2010 ஆம் ஆண்டில் நீண்டநேரம் சமையல் செய்யும் மாரத்தான் போட்டியில் நீண்ட நேரம் ஒரு தனிநபராக சமைத்து, கின்னஸ் உலக சாதனையை வெற்றிகரமாக உருவாக்கியவரான, பிரபலமாக அறியப்படும் செஃப் தாமு, ஹோட்டல் மேலாண்மை கேட்டரிங் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற (பிஹெச்டி) முதல் இந்திய செஃப் என்ற பெருமைக்குரியவர்.
தனி முத்திரை பதித்த அவரது ரெசிப்பிக்களை பகிர்ந்துகொள்வது மட்டுமின்றி, தமிழ்நாடெங்கும் அவர் மேற்கொண்ட பயண கதைகளுக்குள்ளும் பார்வையாளர்களை அவர் நடமாட விடுகிறார். மிகப்பிரபலமாக இருக்கும் மற்றும் அந்தந்த பிராந்தியத்திற்கே உரிய தனிச்சுவையான உணவு தயாரிப்புகளின் பின்புலத்தில் பயன்படுத்தப்படும் சில இரகசியமான உட்பொருட்கள் பற்றிய தகவல்களை அவர் வெளிப்படுத்துகிறார். சிறப்பு செலிபிரிட்டி விருந்தினர்கள் அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை சமைப்பது மற்றும் அவ்வாறு செய்யும்போது கிடைக்கும் உற்சாகம் மகிழ்ச்சியான தருணங்களையும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு கிடைக்கிறது.
புத்துணர்வூட்டும் ஒரு வடிவத்தில் இந்த சமையல் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்படுவது குறித்து பேசிய கலர்ஸ் தமிழ் – ன் பிசினஸ் ஹெட் திரு. அனூப் சந்திரசேகரன், “கொரோனோ தொற்றுப்பரவலைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம், வழக்கத்தைவிட அதிகமாக சமையலறையில் புகுந்து பல்வேறு உணவுகளை சமைத்துப்பார்க்க முயற்சிக்க ஊக்குவித்திருக்கிறது.
பரிசோதனைகள், உற்சாகம் மற்றும் கேளிக்கை ஆகியவை நிகழும் ஒரு இடமாக சமையலறை புதிய வடிவம் பெற்றது. எமது பார்வையாளர்களின் சமையல் கலை பயணத்தில் அவர்களை இன்னும் ஊக்குவித்து, உத்வேகமூட்டும் ஒரு முயற்சியாக பிரபல செஃப் தாமு அவர்கள் பங்கேற்கும் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியை வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இப்புதிய நிகழ்ச்சியானது, குடும்பங்களை இன்னும் நெருக்கமாக மற்றும் பல்வேறு இடங்களுக்கு அவர்களை அழைத்துச்செல்வதும் நிச்சயம்.
அந்தந்த பிராந்தியங்கள், நகரங்களுக்கே உரிய பாரம்பரிய சமையல் முறைகளுக்கு புத்துயிரூட்டும் ஒரு முயற்சியாக இது இருப்பதுடன், ஏறக்குறைய பலரும் மறக்கப்பட்டுவிட்ட அல்லது நீண்டகாலம் தொலைந்து போயிருந்த ரெசிபிக்களை செஃப் தாமு கண்டறிந்து, அதைப்பற்றிய விளக்கத்தை சுவையோடு வழங்குகிறார்.
நமது சமையலறைகளில் காணப்படக்கூடிய நாம் தினசரி பயன்படுத்தும் பல்வேறு சமையல் பொருட்கள் பற்றிய துணுக்குகள் வரலாற்று ரீதியான ஆதாரங்கள் மூலம், மேற்கோள் ஆதாரங்களை எடுத்து வைப்பதன் மூலம் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை. இதற்கும் கூடுதலாக, டாக்டர் செஃப் தாமு அவர்களின் செழுமையான அனுபவமும், ஆழமான அறிவும் இந்த நிகழ்ச்சிக்கு தனித்துவமான சாரத்தை நிச்சயம் கொண்டு வரும் மற்றும் வாரஇறுதி நாட்களின்போது இந்நிகழ்ச்சியை கண்டுரசிக்க பார்வையாளர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கப்போவது நிச்சயம்.
இந்நிகழ்ச்சியின் மூலம் எந்தவொரு நபரும் எளிதாக சமைக்க முயற்சிக்கக்கூடிய, ஆரோக்கியமான, இனிமையான சமையல் முறைகளையும் பார்வையாளர்கள் கற்றுக்கொள்ளலாம். இவற்றை எந்தவொரு நபரும் வீட்டிலேயே முயற்சித்துப் பார்க்கலாம்,” என்று கூறினார்.
கலர்ஸ் தமிழ் அலைவரிசையோடு தனது இந்த ஒத்துழைப்பு உறவு குறித்து பேசிய டாக்டர். செஃப் தாமு, “தமிழகத்தின் இளமையான, துடிப்பான சேனலுடன் இணைந்து செயல்படுவதும், ஒரு தனித்துவமான சமையல் நிகழ்ச்சியை எமது பார்வையாளர்களுக்கு வழங்குவதும் உண்மையிலேயே பெருமகிழ்ச்சியளிக்கிறது. பாரம்பரியமான, தனித்துவமான உணவுகள் மற்றும் சமையல் முறைகளை வெளிக்கொணர்ந்து