சிவா மனசுல சக்தி – விஜய் தொலைக்காட்சி தொடர் வரும் ஜனவரி 21 முதல்
திங்கள் முதல் சனி வரை, மாலை 6 மணிக்கு – சிவா மனசுல சக்தி
விஜய் தொலைக்காட்சி பல தொடர் கதைகளை தொடங்கி வருகிறது. அப்படி மற்றொரு மாறுபட்ட தொடர் கதையாக வருகிறது சிவா மனசுல சக்தி. இது வரும் ஜனவரி 21 முதல், திங்கள் முதல் சனி வரை, மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.இந்த தொடரில் சிவா மற்றும் சக்தி என்னும் மாறுபட்ட கோணங்களுடைய இருவர் எப்படி சந்தித்து அவர்கள் பயணம் மாறுகின்றது என்பது பற்றியது.
கதை
சிவா அதீத கடவுள் நம்பிக்கை உடையவர், சந்தோஷத்திற்கான வழி விதிமுறைகளை கடைபிடிப்பது தான், மேலும் சந்தோஷத்திற்கான வழி விதிமுறைகளை கடைபிடிப்பது தான் என்று நம்புபவர். மறுபுறம் சக்தி அன்பும் காதலும் பெரிதாக பெறாத ஒருவர் ஆனால் சந்தோஷத்திற்கான வழி மனம் சொன்னபோக்கில் நடப்பது என்று நம்புபவர். இப்படி மாறுபட்ட கோணங்களை கொண்ட சிவா மற்றும் சக்தி சந்தித்து தன் வாழ்கை பயணத்தை தொடங்குவார்களா?.
ஹீரோ பெயர், கதாநாயகி பெயர்
இந்த தொடரில் சிவவாக தொலைக்காட்சி நடிகர் விக்ரம் அவர்கள் நடிக்கவுள்ளார், இவர் கன்னட திரைப்படங்களில் சில வேடங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொடரில் சக்தியாக தனுஜா அவர்கள் நடிக்கிறார் இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் மிக பிரபலமானவர். இந்த இரண்டு நட்சத்திரங்களும் தமிழில் இந்த தொடர் மூலம் அறிமுகமாகின்றனர்.இந்த தொடரின் இயக்குனர் பஷீர் அவர்கள். இந்த புத்தம் புதிய சிவா மனசுல சக்தி தொடரை தவறாமல் பாருங்கள்.
Contents