கிங்ஸ் ஆஃப் டான்ஸ் – சனி மற்றும் ஞாயிறு, இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்
நடன விரும்பிகள் அனைவருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சி கிங்ஸ் ஆஃப் டான்ஸ். இந்த நிகழ்ச்சி பல்வேறு நடன கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை காட்ட ஒரு சிறந்த மேடையாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. ஆமாம், கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 7 முதல் ,சனி மற்றும் ஞாயிறு, இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
இதில் வயது வரம்பு கிடையாது, எந்த வயதில் உள்ள நடனக் கலைஞர்களும் வந்து கலந்துக் கொள்ளலாம். மேலும் அவர்கள் ஒரு குழுவாகவோ, தனியாகவோ இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
இந்த நிகழ்ச்சிக்கான சிறந்த நடன திறமைகளுக்கான தேடல் தமிழ் நாட்டில் மதுரை, கோவை மற்றும் சென்னை போன்ற இடங்களில் ஆடிஷன் நடைபெற்றது. அதிலிருந்து பெஸ்டான நடன திறமையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடன திறமையாளர்களை மேலும் மெருகேத்த இந்த நிகழ்ச்சியில் மூன்று கேப்டன்கள் உள்ளன. யார் இந்த கேப்டன்கள் என்றால் நமக்கு மிகவும் பிடித்த சாண்டி மாஸ்டர், ஷெரிப் மாஸ்டர் மற்றும் ஜெப்ரி மாஸ்டர். தன் உற்சாக நடனத்தால் அனைவரையும் கவரும் சாண்டி மாஸ்டரை தெரியாதவர்கள் இல்லை. ஷெரிப் மாஸ்டர் விஜய் தொலைக்காட்சியின் பிரபல நடன நிகழ்ச்சியான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெப்ரி மாஸ்டர் போடா போடி திரைப்படத்தின் பிரபலம் ஆவார்.
சமீபத்தில் வெளியான ப்ரோமோவின் மூலம் மாபெரும் நடன சூறாவளி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று நமக்கு தெரிகிறது. ஆமாம் மாஸ்டர் ராஜு சுந்தரம் அவர்கள் முதன் முறையாக இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராக பங்கேற்கிறார். இந்த திறமை பட்டாளங்கள் அனைவரும் சேர்ந்து இந்த நடன நிகழ்ச்சியை அடுத்த லெவெலுக்கு எடுத்து செல்வார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
மேலும் முதன் முறையாக நமக்கு மிகவும் அபிமானமான கலக்க போவது யாரு நட்சத்திரங்கள் தொகுத்து வழங்கப் போகின்றனர். அவர்கள் வேறு யாருமில்லை கலக்க போவது யாரு சீசன் 5 பிரபலம் சதீஷ் மற்றும் கலக்க போவது யாரு சீசன் 6 வெற்றியாளர் வினோத் ஆவர். இந்த நிகழ்ச்சியில் அரங்கேறவிருக்கும் நடன விருந்தை இனி வாரம் தவறாமல் காணுங்கள்.