சூப்பர் சிங்கர் விஜய் டிவி சோதனைகளுக்குப்
மீண்டும் சூப்பர் சிங்கர்
ஆயிரம் கனவுகளை நிஜமாக்கிய ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் என்றால் எல்லா வயதினறும் அடங்குவர். பாட்டு , ஸ்வரம், ஸ்ருதி என பாமர மக்களும் இசை மொழி பேசத் தொடங்கியது இந்த நிகழ்ச்சியை பார்த்து தான். 2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, தற்பொழுது உலக அளவில் உள்ள இந்தியர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது.
நிகில் மேத்யூ, அஜீஸ், சாய் சரண், திவாகர் மற்றும் ஆனந்தரவிந்தாக்ஷன் என டைட்டிலை தட்டி சென்றவர்கள் பலர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பொருத்த வரையில், வெற்றியளர்கள் மட்டுமின்றி, திறமைசாலிகள் அனைவருக்குமே நல்ல வாய்ப்புகள் கிட்டி வருகின்றது.
தினமும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்த்து பழகியவர்களுக்கு இது ஒரு நீண்ட இடைவேளையாக தெரியும். மீண்டும் சூப்பர் சிங்கர் விரைவில் தொடாங்கவுள்ளது. சிறப்பாக பாடும் திறமைகொண்ட பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். இதன் நேர்முகக் குரல் தேர்வு ஆரம்பமாகிவிட்டது. இதுவரையில் கோயம்பத்தூர் மற்றும் திருச்சியில் நடைபெற்றது.
இப்பொழுது வருகிற டிசம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை அன்று, Santhome, Higher secondary school, சுலிவான் st, குயில் தோப்பு, மயிலாப்பூர், சென்னையில் நடைபெறுகிறது. மக்களே! உங்கள் திறமையை காட்ட தயாராகுங்கள். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.