பாரதிதாசன் காலனி ஸ்டார் விஜய்யின் மெகா சீரியல்

பாரதிதாசன் காலனி ஸ்டார் விஜய்யின் மெகா சீரியல் 20 ஜூன் 6.30 மணி

விளம்பரங்கள்

திங்கள் – வெள்ளி மாலை 6.30 மணி , பாரதிதாசன் காலனி சீரியல்

பாரதிதாசன் காலனி ஸ்டார் விஜய்யின் மெகா சீரியல்
Bharathi Dasan Colony Serial

ஸ்டார் விஜய்யின் மெகா சீரியல் பாரதிதாசன் காலனி 20 ஜூன் 2022 அன்று தொடந்தப்படவுள்ளது. புதிய நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை அறிமுகப்படுத்துவதில் ஸ்டார் விஜய் எப்போதும் முன்னோடியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பாரதி தாசன் காலனி கதை, பல்வேறு குடும்பங்கள் சேர்ந்து வாழும் ஒரு காலனியை மையமாக கொண்ட கதையாகும்.

அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் மாறுபட்டதாக இருந்தாலும், வேறுபாடுகள் நிறைந்ததாக இருந்தாலும் அவர்களுக்குள் குடும்பமாக தனி நபர்களாக எவ்வாறு அவர்களது வாழ்க்கையை எதிர்கொள்கின்றனர் என்பதை சுவாரஸ்யமாக எடுத்துக்காட்டுகிறது இந்தத்தொடர் . பாரதிதாசன் காலனி தொடர் அங்கு வாழும் குடும்பங்களின் மகிழ்ச்சி, மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை சொல்கிறது. இந்த பாரதிதாசன் காலனி தொடரில் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சமூகத்தையும் மனிதர்களையும் பிரதிபலிக்கும்.

கதை

பல்வேறு குடும்பங்கள், அதாவது, இருவரும் வேலைக்கு செல்லும் கணவன் மனைவி மற்றும் குழந்தைகள், ஓய்வுபெற்ற தம்பதியர் தம் மகளுடன் வாழ்கின்ற ஒரு குடும்பம், அங்கு குடும்பத்துடன் தங்கியே பாரதிதாசன் காலனியில் வாட்ச்மேனாக பணிபுரியும் குடும்பத்தலைவன், கணவனன்றி தனியாக தன மகளை வளர்ந்துவரும் இளம் தாய், இளம் பாச்லர், யாருக்கு உதவி என்றாலும் செய்யும் இளைஞன் என்று விதவிதமான கதாபாத்திரங்கள் நேயர்களை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கண்கவர் கதாபாத்திரங்களில் விஜய் டிவியின் பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

விளம்பரங்கள்

பாரதி தாசன் காலனி கலைஞர்களின் பெயர்கள் மற்றும் கதாபாத்திரங்களின் பெயர்கள் பின்வருமாறு:

நடிகர்கள்

அனுஸ்ரீ – விமலா
வசந்த் – சுதாகர்
அபினவ் – ஆனந்த்
அபர்ணா – காவியா
தமிழ்செல்வி – ராதா
பிரபாகரன் – குமரகுரு
சனுஜா – சுசித்ரா
ரித்வா – பவித்ரா
ஐஸ்வர்யா – சுடர்
மோகன்வைத்யா – கிருஷ்ணா
ஷீலா – செண்பகம்
ரேவதி – ஸூசென்
அகில் – நவீன்
கல்யாணி – ஆயிரா
விசாலினி – சித்ரா
மிதுனம் மணி – முருகன்
பவன் கல்யாண் – சந்தோஷ்
சாயா – கீர்த்தி
சுப்புலட்சுமி – வள்ளி
வசந்த் – ஸ்ரீதர்

Star Vijay Shows Online
ஸ்டார் விஜய்

பாரதி தாசன் காலனி கதை காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட் நிறைந்த ஒரு புத்தம்புதிய மெகா சீரியல், இது அனைத்து வயதினரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. இந்தத் தொடர் 20 ஜூன் அன்று திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பப்படும். காணத்தவறாதீர்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *