கிங்ஸ் ஆஃப் டான்ஸ் கிராண்ட் பினாலே
நடன விரும்பிகள் அனைவருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சி கிங்ஸ் ஆஃப் டான்ஸ். இந்த நிகழ்ச்சி பல்வேறு நடன கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை காட்ட ஒரு சிறந்த மேடையாக அமைந்தது. கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2 கிராண்ட் பினாலே நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 25, ஞாயிறு அன்று, மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இறுதி சுற்று போட்டியில் போட்டியிடப்போகும் அந்த 8 நடன சூறாவளிகள் அஸ்வின் ஸ்காட், யோபு & மெர்சினா, ADS கிட்ஸ், O2, விக்னேஷ், லாப் கிரு, பிபின் & ப்ரிண்சி மற்றும் வேலம்மாள் கிட்ஸ். ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவ நடன திறமையை காட்டி டைடிலை வெல்ல முழு முயற்சியிட்டு போட்டியிடுவார்கள்.
ஒரு இடைவேளைக்கு பிறகு தொகுப்பாளினி ரம்யா அவரகள் இந்த நடன நிகழ்ச்சியின் இறுதி சுற்றை தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்த இறுதி சுற்றில் நட்சத்திரங்கள் பலர் வருகை தந்திருந்தனர்- நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், தொகுப்பாளினி DD & நடிகை மற்றும் பிக் பாஸ் பிரபலம் பிந்து மாதவி அவர்கள்.
மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி அவர்களும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். மேலும் சிறப்பு நடன விருந்தாக நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்கள் நடனமாடி பார்வையாளர்களையும் போட்டியாளர்களையும் உற்சாக படுத்தினார்.
இந்த நடன திறமையாளர்களை மேலும் மெருகேத்த இந்த நிகழ்ச்சி முழுவதும் மூன்று கேப்டன்கள் உள்ளன. நமக்கு மிகவும் பிடித்த சாண்டி மாஸ்டர், ஷெரிப் மாஸ்டர் மற்றும் ஜெப்ரி மாஸ்டர். தன் உற்சாக நடனத்தால் அனைவரையும் கவரும் சாண்டி மாஸ்டரை தெரியாதவர்கள் இல்லை. ஷெரிப் மாஸ்டர் விஜய் தொலைக்காட்சியின் பிரபல நடன நிகழ்ச்சியான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெப்ரி மாஸ்டர் போடா போடி திரைப்படத்தின் பிரபலம் ஆவார்.
ராஜு சுந்தரம் அவர்கள் இந்த நிகழ்ச்சியின் நடுவர். அந்த டான்ஸ் மேடையில் போட்டியாளர்கள் செய்யும் பெர்பாமன்ஸ்களுக்கு வெளிப்படையாக, அவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் வைத்து கமெண்ட்ஸ் வழங்கி வந்தார். இந்த பிரமாண்ட நடன மேடையில் யாருக்கு அந்த மகுடம் சூட்ட போகிறார் என்பதை தவறாமல் பாருங்கள்
மேலும் பல சுவாரசியமான நடன பெர்பாமன்சுகளை தவறாமல் பாருங்கள்.