சின்னத்தம்பி தொடர் -திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு தொடங்கவுள்ளது

விளம்பரங்கள்

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான ஒரு தொடர்கதை தான் சின்னத்தம்பி. இந்த தொடர், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு தொடங்கவுள்ளது. சின்னத்தம்பி ஒரு குடும்பத்தொடர், இதன் கதாநாயகன் நம்மில் ஒருவனாகவும் நம் அனைவரின் அபிமானமாகவும் ஆகிவிட்டான். அம்மா பிள்ளையாகவும், வீரனாகவும் , பெண்களை மதிப்பவனாகவும் வெகுளி கலந்த கிராமத்து பையனாகவும் வளம் வருகிறார் சின்னத்தம்பி. மொத்தத்தில் இவர், பெண்கள் அனைவரும் தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்று நினைக்கும் ஒரு கனவு நாயகன். மற்றொரு பக்கம், பணக்கார திமிர் பிடித்த மாடர்ன் சிட்டி பெண் நந்தினி. ஆனால் நல்ல மனம் படைத்தவள்.

இருவரின் முதல் சந்திப்பு கசப்பாக அமைந்தது. ஆனால் விதியின் வழியால் இருவரும் இரண்டாவது முறையாக சந்திக்கின்றனர் அதுவும் இந்த முறை சின்னத்தம்பி நந்தினியின் இல்லத்தில் தங்கி அவளின் திருமணத்திற்கான பணியை முன் எடுத்து செய்கிறார். சின்னத்தம்பியை அடியோடு வெறுக்கும் நந்தினி. தற்பொழுது நந்தினி கெளதம் திருமணம் நடைபெறுமா?

விளம்பரங்கள்

என்னதான் சின்னத்தம்பியை நந்தினி அடியோடு வெறுத்தாலும் , விதி அவர்களை ஒன்று சேர்கிறதா? இரு துருவங்களுக்கு இடையே காதல் மலருமா? கல்யாண வாழ்க்கையில் இணைந்தால் என்ன ஆகும்?
இதில் சின்னத்தம்பியாக காதலிக்க நேரமில்லை தொடரின் புகழ் ப்ரஜன் சின்னத்தம்பியாக நடித்துள்ளார். மேலும், நந்தினியாக ரெட்டை வால் குருவி புகழ் பாவனி ரெட்டி அவர்கள் நடிக்கிறார். இந்த தொடரின் இயக்குனர் திரு. அருள் ராசன் அவர்கள். இந்த குடும்ப தொடருக்கு இசை அமைக்கிறார் தொலைக்காட்சியின் பிரபல இசை அமைப்பாளர் இளையவன் அவர்கள்.

இந்த இரு வேறுபட்ட கதாபாத்திரங்களின் கலாச்சார மோதல்கள், பொருளாதார வேறுபாடுகள் ஆகியவையை கடந்து இந்த வாரம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்படவுள்ளது, திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணிக்கு காணத்தவறாதீர்கள் சின்னத்தம்பி!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *