நாம் இருவர் நமக்கு இருவர் – திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு
விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஓர் அற்புதமான தொடர் ஆரம்பமாகவுள்ளது. நாம் இருவர் நமக்கு இருவர். இந்த தொடர்.விரைவில் வரும் மார்ச் 26 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதுவரையில் நாம் தொலைக்காட்சி தொடர்களில் மாமியார் மருமகள், அக்கா தங்கை, தோழிகள் என பெண்களை மட்டுமே சுற்றி வரும் தொடர்கதையை கண்டிருக்கிறோம். அதிலிருந்து மாறுபட்டு ஒரு வித்யாசமான கதை களத்தில் அமையும் இந்த தொடர்.
மாயன், அரவிந்த் இருவரும் ரெட்டை பிள்ளைகள். பிறந்த உடனே அரவிந்தை குழந்தை இல்லாத தம்பதிக்கு தத்துக் கொடுக்கிறார்கள். அரவிந்த் படித்து மும்பையில் பிரபல டாக்டராக இருக்கிறான். அதே நேரம் மதுரைக்கு அருகில் ஒரு ஊரில் மாயன் வேலைக்கும் போகாமல் மரத்தடி பஞ்சாயத்து, வம்பு சண்டை, என்று அலப்பறை செய்துக் கொண்டிருக்கிறான். முப்பது வருடம் கழித்து அரவிந்தின் அப்பா அம்மா அரவிந்த் வளர்ப்பு மகன் என்ற உண்மையை சொல்கிறார்கள். மதுரைக்கு அரவிந்த் தனது உண்மையான பெற்றோரை பார்க்க செல்கிறான். அங்கு தன்னைப் போலவே இருக்கும் அண்ணனை சந்திக்கிறான்.
இருவரின் தோற்ற ஒற்றுமை இருவரின் வாழ்வையும் எப்படி புரட்டி போடுகிறது. இருவரின் வாழ்விலும் காதல், கல்யாணம், சில கலாட்டாக்கள் கொண்ட ஒரு கலகலப்பான குடும்ப கதை தான் இந்த நாம் இருவர் நமக்கு இருவர். இந்த தொடரின் அரவிந்த் மற்றும் மாயன் என்னும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சரவணன் மீனாட்சி மற்றும் மாப்பிளை புகழ் நடிகர் செந்தில் அவர்கள். நாயகிகளாக திமிர் பிடித்த படித்த பணக்காரப்பெண்ணாக ரக்க்ஷா நடிக்கிறார். இவர் தமிழ் கடவுள் முருகன் தொடரில் அஜாமுகி வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமைதியான வெள்ளந்தி பெண்ணாக ரேஷ்மியும் நடிக்கிறார்கள்.
இயக்குனர் திரு தாய் செல்வம் அவர்கள் இந்த தொடரை இயக்குகிறார். இந்த நகைச்சுவை கலந்த குடும்ப தொடரை இனி காணத்தவறாதீர்கள்.