நினைக்க தெரிந்த மனமே- இந்த வாரம்
விஜய் தொலைக்காட்சியின் மற்றும் ஓர் நெடுந்தொடர், நினைக்க தெரிந்த மனமே. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த கதையின் நாயகி, தீபா ஒரு விபத்தில் தனது நினைவை இழக்கின்றார். தீபா வசதியும் அன்பும் கொண்ட கணவர் மற்றும் குடும்பத்துடன் சந்தோஷமான இல்லற வாழ்வை வாழ்ந்து வருகின்றார். இருந்தும் தீபாவிற்கு தான் யார் என்பதும் அவளுடைய கடந்த கால வாழ்க்கையும் நியாபகத்தில் இல்லை. அது அவரை உறுத்திக் கொண்டும் இருக்கின்றது.
அடிக்கடி தீபாவுக்கு சில காட்சிகள் ‘நினைவுகள் போல வந்து செல்லும்போது அவருக்கு ஒரு பதட்டம் ஏற்படுகிறது. அதை தவிர்த்து அவர் தன் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிக்கின்றார். ஆனால் அது நீடிக்கவில்லை ஒருநாள் அனைத்தும் நொறுங்கிவிடுகின்றது. தற்பொழுது தீபாவின் கடந்தகால வாழ்க்கையை சார்ந்த குடும்பம், தீபாவை கண்டு கொள்கின்றனர். தன குடும்பத்தை சார்ந்தவர் என்று அவர்கள் தெரிவித்தபின் அரவிந்தின் குடும்பம் அதை மறுக்கின்றனர் அரவிந்த் என்ன கூறுவார்? தீபாவுக்கு பின்னால் இருக்கும் மர்ம கடந்தகால வாழ்கை என்ன.
அவரின் கடந்த வாழ்க்கையும் அவர் குடும்பமும் யார்? தீபாவின் இந்த நிலைக்கு காரணம் என்ன?. அவள் உண்மை என்று நினைத்த வாழ்கை பொய் என்று தோன்றுகின்றது.இந்த தொடரில் ரெட்டை வால் குருவி புகழ் அஸ்வின் அரவிந்தாக நடிக்கிறார். நடிகை ஐஸ்வர்யா இந்த தொடர்கதையின் மூலம் தமிழ் தொலைக்காட்சிக்கு அடியெடுத்து வைத்துள்ளார். கன்னட தொலைக்காட்சியின் பிரபலம் இவர். மேலும் நடிகை உமா ரியாஸ் அவர்கள் இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இப்படி பல திருப்பங்களுடன் வருகிறது இந்த வாரம் நினைக்க தெரிந்த மனமே தொடர்.