சூப்பர் சிங்கர் சீசன் 8 – 24 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிரம்மாண்ட ஒளிபரப்பு தொடக்கம்
ஸ்டார் விஜய் யின் சூப்பர் சிங்கர் சீசன் 8
ஸ்டார் விஜய் முதன்மை வாய்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் அதற்கே உண்டான ப்ரம்மாண்டத்துடன் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ரசிகர்களும் நேயர்களுக்கு எப்பொழுதும் பெருகிக்கொண்டே இருப்பர் என்றால் மிகையாகாது. மேலும் இதில் பங்குகொள்ளும் ஒவ்வொரு போட்டியாளரும் உலகளவில் பிரசித்தி பெற்று கோலோச்சி நிற்கின்றனர் என்றும் சொல்லவேண்டும்.அவர்களில் பலர் இப்போது உலகளவில் புகழ்பெற்ற பாடகர்களாகவும் மக்களின் மனதில் இடம்பிடித்த இளம் கலைஞர்களாகவும் இருக்கின்றனர்.
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக சூப்பர் சிங்கர் சீசன் 8 இன் தொடக்க எபிசோட் ஜனவரி 24 ஆம் தேதி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை ஒன்பது மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. சூப்பர் சிங்கர் சீசன் 8 வெளியீட்டு எபிசோடில் ஹரிஹரன், சங்கர்மஹாதேவன், விஜய் பிரகாஷ், விஜய் யேசுதாஸ், எஸ்பிபி சரண், கார்த்திக், சித் ஸ்ரீராம், சைந்தவி, ஷாஷா திரிபாதி, கிரேஸ் கருணாஸ், சின்னபொண்ணு, ஆண்டனி தாசன், கானா பாலா என்று இசை ஜாம்பவான்கள் பங்குபெறுகின்றனர்.
இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு 24 ஜனவரி அன்று காலை 11 மணி முதல் தொடங்க உள்ளது. மேலும் வரும் வாரங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30 மணி வரை ஒளிபரப்பப்படும். இந்த சீனின் நடுவர்களாக அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயால் மற்றும் கல்பனா ஆகியோர். இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் மா கா பா ஆனந்த் தவிர வேறு யாரும் வழங்க மாட்டார்கள்.