Sarbath Movie Direct Release

சர்பத் திரைப்படம் உலகளவில் தொலைக்காட்சியில் முதன் முறையாக – கலர்ஸ் தமிழ்

விளம்பரங்கள்

ஏப்ரல் 11 அன்று மாலை 4.00 மணிக்கும், இரவு 7.00 மணிக்கும் சர்பத் திரைப்படம்

Sarbath Movie Direct Release
Sarbath Movie Direct Release

அறிமுக இயக்குனர் பிரபாகரனின் இயக்கத்தில் உருவாகி அதிக எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கும் திரைப்படமான சர்பத் திரைப்படத்தின் நேரடி சேட்டிலைட் ப்ரீமியர் நிகழ்ச்சியை உங்கள் தொலைக்காட்சி திரைகளுக்கு, தமிழ்நாட்டின் மிக இளமையான பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ் கொண்டு வருகிறது. புகழ்பெற்ற நடிகர் கதிர், பிரபல நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் திரைக்கு புதுவரவான ரகசியா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். சிறப்பான இந்த நடிகர் பட்டாளம் மட்டுமின்றி, திறமை வாய்ந்த அஜீஸ் அசோக் இசையமைப்பாளராக ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். டெய்ரி டே ஐஸ்க்ரீம் மற்றும் கேட்பரி பெர்க் ஆகிய சிறப்பு கூட்டாளர்களின் கூட்டுவகிப்பில் ஒளிபரப்பாகும் சர்பத் திரைப்படத்தின் முதல் அறிமுக ஒளிபரப்பை 2021 ஏப்ரல் 11 அன்று மாலை 4.00 மணிக்கும் மற்றும் இரவு 7.00 மணிக்கும் கலர்ஸ் தமிழில் கண்டு ரசிக்க தயாராகுங்கள்.

திண்டுக்கல் நகரை பின்புலமாகக் கொண்டு ஒரு ஐடி தொழில்துறை பணியாளரின் வாழ்க்கையை நடிகர் கதிர் சித்தரிக்கின்ற ஒரு குடும்ப திரைப்படமாக சர்பத் உருவாக்கப்பட்டுள்ளது. தனது அண்ணனின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு செல்லும்போதுதான் திருமண நிகழ்வு இரத்து செய்யப்பட்டதை அவர் அறிய நேரிடுகிறது. தனது அண்ணன் திருமணம் செய்துகொள்ள திட்டமிடப்பட்டிருந்த அதே பெண்ணுடன் கதிர் காதலில் விழும்போது, திரைப்படத்தின் கதை பரப்பரப்பான திருப்பத்தைக் காண்கிறது. நண்பனாக வரும் சூரியின் உதவியோடு இந்த சிக்கலான சூழலை கதிர் எப்படி சமாளிக்கிறார் என்பது சுவாரஸ்யமானது. காதல், நட்பு, சகோதரத்துவ உணர்வு மற்றும் சிரிப்பு என பல்வேறு உணர்வுகளின் நேர்த்தியான தொகுப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் குடும்பம் முழுவதும் சேர்ந்து அமர்ந்து ரசிக்கக்கூடிய சிறப்பான பொழுதுபோக்குப் படமாக இருக்கும்.

கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. அனூப் சந்திரசேகரன் திரைப்படத்தின் பிரீமியர் ஒளிபரப்பு குறித்து பேசுகையில், “தரமான நிகழ்ச்சிகளைக் கொண்டு எமது பார்வையாளர்களுக்கு விருந்து படைக்க வேண்டும் என்பதே கலர்ஸ் தமிழில் எப்போதும் எங்களது நோக்கமாக இருந்து வருகிறது. இதை இன்னும் அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்காக, எங்களது நிகழ்ச்சி அட்டவணையின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக திரைப்படங்களை கொண்டு வருவது என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். ஒரு மாதத்தின் சிறந்த திரைப்படம் (Movie of the Month) என்ற நிகழ்ச்சியை இதற்காக நாங்கள் அறிமுகம் செய்கிறோம். இதன்மூலம் எமது அலைவரிசையில் புத்தம்புதிய அல்லது சமீபத்தில் வெளியான திரைப்படத்தை பார்வையாளர்கள் கண்டு மகிழலாம். இச்செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, முதலாவதாக கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் மட்டும் பிரத்யேகமாக ஒரு நேரடி சேட்டிலைட் ப்ரீமியர் ஒளிபரப்பாக சர்பத் திரைப்படத்தை நாங்கள் வழங்குகிறோம். குடும்பம் முழுவதும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இது இருக்கிறது,” என்று கூறினார்.

இத்திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் கதிர் இத்திரைப்படம் குறித்து பேசுகையில், “சர்பத் திரைப்படத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்றிருப்பது குறித்து நிச்சயமாகவே நான் மகிழ்ச்சியும், உற்சாகமும் கொண்டிருக்கிறேன். முற்றிலும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை சித்தரிக்க முதன்முறையாக இத்திரைப்படத்தில் நான் முயற்சி செய்திருப்பதே இதற்குக் காரணம். சமயத்திற்கு ஏற்றவாறு துணுக்குகளை வாரி வீசும் நகைச்சுவை உணர்வுமிக்க சூரி மற்றும் திறமைமிக்க நடிகையான ரகசியா ஆகியோரோடு இணைந்து இத்திரைப்படத்தில் பணியாற்றியது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. அதிக நம்பிக்கையளிக்கும் இயக்குனரான திரு. பிரபாகரன் அவர்களது வழிகாட்டலில் எனது திறமைகளை இதில் வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. தொலைக்காட்சி தளங்களில் திரைப்படங்கள் வெளியாகின்ற தற்போதைய போக்கினையொட்டி, சர்பத் திரைப்படமும் கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் நேரடி சேட்டிலைட் ப்ரீமியராக ஒளிபரப்பப்படுவதில் எனக்கு மகிழ்ச்சியே. இத்திரைப்படத்தில் மிகவும் அனுபவித்து நான் பணியாற்றியிருக்கிறேன். ரசிகர்களும், பார்வையாளர்களும் இத்திரைப்படத்தை ரசித்து அனுபவிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

விளம்பரங்கள்

நகைச்சுவை நடிகர் சூரி இத்திரைப்படம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “கலர்ஸ் தமிழ் போன்ற ஒரு பிரபல அலைவரிசையில் நேரடி சாட்டிலைட் பிரீமியர் நிகழ்ச்சியாக நான் நடித்திருக்கும் திரைப்படம் சர்பத் ஒளிபரப்பப்படுவது உண்மையிலேயே பெரும் உற்சாகத்தை எனக்கு உருவாக்கியிருக்கிறது. இத்திரைப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்திருப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. முதன் முறையாக நடிகர் கதிருடன் சேர்ந்து நடித்திருப்பது இன்னும் மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. இத்திரைப்படத்தில் ஆர்வத்தோடு, அனுபவித்து நான் நடித்ததைப்போலவே எனது கதாபாத்திரத்தையும் பார்வையாளர்கள் பெரிதும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.

இத்திரைப்படம் வெளியாவது குறித்து பேசிய இதன் இயக்குனர் பிரபாகரன், “ஒரு திரைப்பட படைப்பாளியாக எனது பயணத்தை தொடங்கியிருப்பதால் சர்பத் எப்போதும் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் அதன் நேரடி சாட்டிலைட் பிரீமியர் நிகழ்ச்சியாக இலட்சக்கணக்கான பார்வையாளர்களின் விரிவான தளத்தை எனது அறிமுக திரைப்படம் சென்றடையும் என்பதால், நான் பெருமகிழ்ச்சியும், பிரமிப்பும் கொண்டிருக்கிறேன். ஒரு குழுவாக, இத்திரைப்படத்தில் கடும் உழைப்பை நாங்கள் அனைவரும் வெளிப்படுத்தியிருக்கிறோம். இத்திரைப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும், தங்களை பார்வையாளர்கள் இணைத்து, ஒப்பிட்டுப்பார்க்க இயலும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டார்.

2021 ஏப்ரல் 11 அன்று மாலை 4.00 மணிக்கும் மற்றும் மறுஒளிபரப்பாக இரவு 7.00 மணிக்கும் ஒளிபரப்பாகும் சர்பத் திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் நிகழ்ச்சியை கண்டு மகிழ கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய மறக்காதீர்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *