கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மைல்கல் சாதனையைத் தொட்டிருக்கும் இதயத்தை திருடாதே, உயிரே, அம்மன் ஆகிய பிரபலமான தொடர்கள்
அனைத்து சுவாரஸ்யமான திருப்பங்களையும் கண்டுகளிக்க இந்த வாரம் இரவு 7.00 மணி முதற்கொண்டே கலர்ஸ் தமிழ் டிவியை டியூன் செய்க
சென்னை, 30 நவம்பர் 2020: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த ஒரு வாரம் முழுவதும் சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட பிரபலமான தொடர்கள் மைல்கல் சாதனையை நிறைவு செய்யவுள்ளன. வரம்பற்ற பொழுதுபோக்கு என்ற உறுதிமொழியுடன் கூடிய கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட வரிசையான தொடர்கள் திரையிலிருந்து தங்களது பார்வையை திசை திருப்பாமல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் என்பது நிச்சயம். உயிரே மற்றும் இதயத்தை திருடாதே ஆகிய இரண்டும் அவற்றின் 200-வது தொடர்கள் நிறைவு செய்ததை கொண்டாடிய அதே சமயம், அம்மன் அதன் 250 வது தொடரை அடைந்துள்ளது. வரவிருக்கும் வாரத்தில் தொடர்களின் ஒரு கண்ணோட்டத்தை இங்கே பார்ப்போம்.
மாங்கல்ய சந்தோஷம் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணி): நித்யா மற்றும் தருண் வாழ்க்கையில் முழு பாதகமான சூழ்நிலையும் மாறிய நிலையில் நித்யா, தருணை ஆள்மாறாட்டம் செய்த நபரை பூஜாவின் அறைக்கு வரவழைக்கிறாள். இதற்கிடையே, உண்மையான தருண், துளசியுடன் சேர்ந்து ரகுவரனுக்கு எதிராக அவனுடைய ஏமாற்று செயலை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக சூழ்ச்சி செய்கிறார். ரகுவரனின் மாறுவேடத்தை நித்யா கண்டுபிடிப்பாரா? தருணும், நித்யாவும் மீண்டும் ஒன்றிணைவார்களா? மாங்கல்ய சந்தோஷத்தில் நித்யா மற்றும் தருணின் விதியை தெரிந்துகொள்வதற்கு கலர்ஸ் தமிழ் டிவியை இரவு 7.00 மணிக்கு டியூன் செய்யவும்.
அம்மன் (திங்கள் முதல் சனிக்கிழமை வரை, இரவு 7:30): அரவிந்தின் காதலை மறைத்ததற்காக லட்சுமி சக்தியை எதிர்கொண்டு தண்டிக்கிறார். குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக குடும்பத்துடன் உறவு முறிப்பதற்கு அவள் சக்தியை தள்ளுகிறாள். மறுபுறம் சக்தியை ஈர்ப்பதற்கு ஈஸ்வர் ஒரு திட்டம் தீட்டுகிறான். ஆனால், சக்தியின் சூழ்நிலையை சிக்கலாக்கும் வகையில் அது முடிகிறது. இதிலிருந்து சக்தி மீண்டும் எழுச்சி பெறுவாளா? அம்மனில் என்ன நிகழ்கிறது என்பதை கண்டறிவதற்கு கலர்ஸ் தமிழ் டிவியை இரவு 7.30 மணிக்கு டியூன் செய்யவும்.
இதயத்தை திருடாதே (திங்கள் முதல் சனிக்கிழமை வரை, இரவு 8.30): சஹானாவின் தோழி பிரியா தனது திருமணத்திலிருந்து தப்பிக்க திட்டமிட்டுள்ளாள் என்பதை கண்டறிந்ததும் சிவாவும்? சஹானாவும் அதிர்ச்சியடைகின்றனர். ஆகவே, பிரியாவின் இந்த முடிவிற்கு காரணம் என்ன என்பதை கண்டறிவதற்கு சிவாவும், சஹானாவும் ஒன்று சேர்கின்றனர். இதிலிருந்து பிரியாவை தடுப்பதில் அவர்கள் வெற்றி பெறுவார்களா? இது சிவாவையும்? சஹானாவையும் ஒருவரோடொருவரை நெருக்கமாக கொண்டு வருமா? இதயத்தில் திருடாதே தொடரில் என்ன நிகழ்கிறது என்பதை தெரிந்துகொள்ள கலர்ஸ் தமிழ் டிவியை இரவு 8.30 மணிக்கு டியூன் செய்யவும்.
உயிரே (திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணி): சந்திராவும் மற்றும் பவித்ராவும் சேர்ந்து ஒரு விபத்திலிருந்து செழியனின் உயிரை காப்பாற்றுகிறார்கள். அதன் பின்னர், செழியனின் கட்டணமில்லா மருத்துவமனை, அரசாங்கத்திடமிருந்து ஒரு பச்சை சிக்னல் பெறுகிறது. எனினும், மருத்துவமனை குறித்து நல்ல செய்தி கிடைத்த போதிலும், முடிவில் செழியன் குடும்பத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றைச் செய்கிறார். அவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செழியன் செய்தது என்ன? உயிரே தொடரில் என்ன நிகழ்ந்தது என்பதை கண்டறிய கலர்ஸ் தமிழ் டிவியை இரவு 9.30 மணிக்கு டியூன் செய்யவும்.