மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை புத்தம் புதிய மெகா தொடர் – 24 ஏப்ரல் திங்கள் – வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு
திங்கள் – வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு – மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை
ஸ்டார் விஜய் மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை என்ற புத்தம் புதிய மெகா தொடரை வரும் திங்கள் முதல் ஒளிபரப்பவுள்ளது. மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை ஒரு சுவாரஸ்யமான காதல் நிறைந்த குடும்பக்கதை.
விக்ரமும் வேதாவும் அடுத்தடுத்த வீட்டில் வாழ்கிறார்கள். இவர்களைச் சுற்றி கதை நகர்கிறது. வேதா ஒரு மருத்துவர் மற்றும் விக்ரம் ஒரு வெற்றிகரமான கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர்.
விக்ரம் – வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் மேலானது பணம்தான் என்றும், எல்லாப் பெண்களும் பணத்துக்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற தவறான கண்ணோட்டத்தில் இருப்பவர்.
தன் கசப்பான கடந்த காலத்தால் இப்படி மாறி இருப்பவர். தன் சொந்த மகள் மற்றும் பெற்றோரிடம் கூட அன்பை, அக்கறையை வெளிப்படுத்தும் திறனை இழந்துவிட்டான். இதற்கிடையில், வேதா – ஒரு மகிழ்ச்சியான, வெற்றிகரமான இளம் மருத்துவர், அவர் வாழ்க்கையில் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பவள். மேலும் தன்னைப் புரிந்துகொண்டு அவளை சமமாக நடத்தும் சரியான துணையை அவளால் கண்டுபிடிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறாள்.
விக்ரம் மற்றும் வேதா இருவரும் இரு துருவங்கள். எப்போதும் உடன்பட முடியாத வலுவான கருத்துக்கள் அவர்களுக்குள் ஏற்படும். அவர்கள் எளிதில் சமரசம் செய்துகொள்ளமாட்டார்கள்.
வேதாவின் மூலம் விக்ரமிற்கு உலகத்தைப் பற்றிய பார்வை மாறுபடும் வேளையில் அவர்களது வழக்கை எவ்வாறு மாறவிருக்கிறது என்பதுதான் மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை.
நடிகர்கள் நளினி (கஜலட்சுமி), சமீர் (விக்ரம்), அஸ்வதி (வேதா), பேபி ஆழியா (தன்வி), உமா (காவேரி), கிரீஷ் (சுப்ரமணி), வருண் உதய் (ஆதித்யா), சுனிதா (மிருணாளினி) மற்றும் பலர்.
மோதலும் காதலும் – விக்ரம் வேதாவின் காதல் கதை 24 ஏப்ரல் 2023 அன்று திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.