ராஜா ராணி சீசன் 2 அக்டோபர் 12 மாலை 6.30 மணிக்கு
திங்கள்-சனி மாலை 6.30 மணிக்கு சீரியல் ராஜா ராணி சீசன் 2
ஸ்டார் விஜய் முற்றிலும் புதுமையான தொடர்களை வழங்குவதில் முன்னோடி என்று சொன்னால் மிகையாகாது. வரும் திங்கள் முதல் ராஜா ராணி சீசன் 2 ஒளிபரப்பாகிறது.
ஸ்டார் விஜய் யில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மிகவும் பிரபலமானது. நேயர்களின் அபிமான தொடராக இருந்து வந்தது. ஆல்யா மனசா மற்றும் சஞ்சீவ் ஆகியோர் முந்தைய சீசனில் செம்பா மற்றும் கார்த்திக் என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர், இது ஒரு அற்புதமான வெற்றியாகும், இது ராஜா ராணியின் இரண்டாவது சீசனுக்கு வழி வகுத்தது. ரசிகர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இது மிகவும் பாராட்டப்பட்ட சீரியல், இது இளைஞர்களையும் அனைத்து வயதினரையும் பார்வையாளர்களை ஈர்த்தது.
கதை
சந்தியா (ஆல்யா மானஸ) தனக்கென ஒரு இலட்சியத்தை வளர்த்துக்கொண்டு அதை சாதிக்க வேண்டும் என்ற உறுதியுடன் வாழ்கிறாள். அவள் ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று எண்ணுகிறாள் . சரவணன் நல்ல உள்ளம் கொண்ட அதிகம் படிக்காத இளைஞன் . சந்தியா குடும்ப சூழல் காரணமாக சக்தியை திருமணம் செய்ய நேர்கிறது. சக்தி குடும்பத்துடன் இணைந்து இனிப்பு வியாபாரம் செய்து வருகிறார்.
சரவணனின் தாய் தன மருமகள் அதிகம் படித்திருக்க தேவை இல்லை குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொண்டாள் பொதும் என்ற முடிவுடன் இருக்கிறார். சந்தியா நன்கு படித்தவள் என்பதை அவரிடம் இருந்து மறைத்து சரவணனிற்கும் சந்தியாவிற்கு திருமணம் நடைபெற்றுவிடுகிறது. சந்தியாவின் கனவு என்னவானது. அவள் ஐ பி எஸ் அதிகாரி ஆக முடிகிறதா அவள் வாழ்வில் என்னென்ன நிலைகளை எதிர்கொள்கிறான் சரவணன் அவளுக்கு உறுதுணையாக இருக்கிறானா என்பதை ராஜா ராணி 2 தொடரில் காணலாம். விறுவிறுப்பு குறையாமல் நல்ல கதை கொண்ட இத்தொடர் நேயர்களை நிச்சயம் கவரும் என்பதில் ஐயமில்லை.
நட்சத்திர நடிகர்கள்
ஆல்யா மனசா, சித்து, பிரவீனா, ரவி, அர்ச்சனா மற்றும் பலர். சீரியலை பிரவீன் பெனட் இயக்கியுள்ளார். அக்டோபர் 12, திங்கள் முதல் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஸ்டார் விஜய் இல் காணாதவறாதீர்கள் . ராஜா ராணி சீசன் 2 தொடரின் நாயகியாக ஆலியா மானஸ சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை பிரவீனா மற்றும் சித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Contents