அவள் – திகில் திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
மார்ச் 14-ந்தேதி மாலை 4 மணிக்கு டியூன் செய்யுங்கள்; சித்தார்த் – ஆண்ட்ரியா நடித்த திகில் படத்தை பார்த்து மகிழுங்கள்
தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. அதேபோல் இந்த வார இறுதியிலும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த சித்தார்த் – ஆண்ட்ரியா நடித்த முற்றிலும் திகில் நிறைந்த திரைப்படமான ‘அவள்’ என்னும் திரைப்படத்தை வரும் 14-ந்தேதி மாலை 4 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது. இந்த திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்க பாப்கார்ன் உள்ளிட்ட உணவு பொருட்களுடன் நீங்கள் தயாராக இருங்கள்.
விமர்சன ரீதியாக அனைவரிடமும் பாராட்டைப்பெற்ற ‘அவள்’ திரைப்படம் பல்வேறு திருப்பங்கள் நிறைந்த திகில் திரைப்படம் ஆகும். ஒவ்வொரு காட்சியும் உங்களை இருக்கையின் விளிம்பிற்கு கொண்டு செல்லும். இந்த திரைப்படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதை நிப்பான் பெயிண்ட் உடன் இணைந்து உங்களுக்காக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பவிருக்கிறது. இந்த படத்தை பார்த்து ஞாயிற்றுக்கிழமையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதைப் போக்குங்கள்.
‘அவள்’ படம் கடந்த 2017-ம் ஆண்டு தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ஒளிப்பதிவும், இசையும் இதை பார்த்த அனைவராலும் பாராட்டப்பட்டது. இதன் கதை ஒரு இளம் தம்பதியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சுற்றி அமைந்துள்ளது. இளம் தம்பதிகளாக நடிகர் சித்தார்த் மூளை அறுவை சிகிச்சை நிபுணராக டாக்டர் கிருஷ்ணாவாகவும் அவரது இளம் மனைவியாக லட்சுமி என்ற பெயரில் ஆண்ட்ரியாவும் நடித்துள்ளனர். இந்த ஜோடி மலைப் பகுதி அருகே உள்ள ஒரு வீட்டில் அமைதியாக வாழ்ந்து வருகிறது. அப்போது ஒரு புதிய குடும்பம் ஒன்று அவர்களின் வீட்டிற்கு பக்கத்தில் குடியேறுகிறது. அதனைத் தொடர்ந்து கதையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகிறது.
அந்த குடும்பத்தில் ஒரு இளம் பெண் இருக்கிறாள். அவள் டாக்டர் கிருஷ்ணா மற்றும் லட்சுமியுடன் பிரியமாக பழகுகிறாள். குறும்புத்தனமான அவள் ஒரு இருண்ட ரகசியத்தை கண்டுபிடிக்கிறாள். அது பல்வேறு அமானுஷ்ய சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது. அதைத் தொடர்ந்து கதையானது தீயசக்திக்கும் நல்ல சக்திக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை நோக்கி நகர்கிறது. அந்த தீயசக்தியை டாக்டர் கிருஷ்ணாவும் அவரது குடும்பத்தினரும் எப்படி வென்றார்கள் என்பதே படத்தின் கதையாகும்.
இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா தவிர பல்வேறு நடிகர்களும் நடித்துள்ளனர். அதுல் குல்கர்னி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஞாயிற்றுக்கிழமை டாக்டர் கிருஷ்ணா மற்றும் அவரது குடும்பத்தினருடன் மலையில் தொலைந்து போன மர்மங்களை கண்டுபிடிக்க தயாராக உள்ளனர். அவர்களை பார்த்து ரசிக்க நீங்கள் தயாராகுங்கள்; அன்று மாலை 4 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.