நாகினி 5

நாகினி 5 கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் – ஜனவரி 21 முதல் வாரந்தோறும் திங்கள் முதல் சனி வரை

விளம்பரங்கள்

விறுவிறுப்பான புதிய தொடர் நாகினி 5 பழிவாங்குதல், அன்பின் காவியமாக வெளிவருகிறது

நாகினி 5
Naagini 5 Tamil Telecast Time

தமிழகத்தில் பொழுதுபோக்கு சேனல்களில் முன்னிலை வகிக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கற்பனை கதையான நாகினி தொடர் ஏற்கனவே ஒளிபரப்பாகி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது ‘நாகினி 5’ என்ற புதிய தொடரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது. அன்பின் காவியமாக வெளிவரும் இந்த தொடரில் பல புதிய திருப்பங்கள் மற்றும் பழி வாங்குதல் போன்ற சுவாரஸ்யமான கதை அமைப்புடன் இது ரசிகர்களை மகிழ்விக்கும். இந்த தொடர் நாகினி உலகை பற்றியும் அன்பு, கோபம், எதிரிகளை பழிவாங்குதல் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுள்ளது.

இத்தொடரின் நாயகி சத்ய யுகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் தொடங்கிய தனது காவியப் போரை முடிவுக்கு கொண்டு வந்து தனது காதல் பயணத்தை நிறைவேற்ற போராடுவதாக கதை செல்கிறது. இத்தொடர் ஜனவரி 21-ந்தேதி வியாழக்கிழமை இரவு 6:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதனைத் தொடர்ந்து வாரந்தோறும் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகிறது.

இந்த தொடரின் நாயகியாக ஹினா கான் நடிக்கிறார்.பல நூற்றாண்டுகளுக்கு முன்புசத்ய யுகத்தில், நாகினி குலத்தின் முன்னோடியாக ஆதி நாகினியாக இவர் இருக்கிறார். இந்த நிலையில் அவள் நாக் ஹரிஷை (மோகித் மல்கோத்ரா நடிக்கிறார்) அதிதீவிரமாக காதலிக்கிறாள். ஆனால் அவர்களது காதல் மகிழ்ச்சியான முடிவை எட்டுவதற்கு முன்பே, விதி அவர்களை பிரிக்கிறது. அதே சமயம், கலு ஆகாஷ் (தீரஜ் தூப்பர் நடிக்கிறார்) நாகினியை வெறித்தனமாக காதலிக்கிறான், ஆனால் அவனது காதலை நாகினி ஏற்க மறுக்கிறாள்.

விளம்பரங்கள்

இதனால் பழிவாங்கும் போக்குடன் கதை துவங்குகிறது. இந்த பழிவாங்கும் நடவடிக்கையால் நாகினியின் காதல் நிறைவேறாமல் இருக்கும் நிலையில் அவள் இறக்கிறாள். அவள் இறக்கும்போது ஒரு சபதம் ஏற்கிறாள். இதனைத் தொடர்ந்து அவள் கலியுகத்தில் மறு பிறவி எடுக்கிறாள். இந்த நிலையில் கடந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட நிலை குறித்தும் தனது சபதத்தை நிறைவேற்ற பழிக்கு பழி வாங்கவும் அவள் துடிக்கிறாள். அவள் காதலனுடன் மீண்டும் சேருவாளா? அல்லது விதி அவர்களின் கதைக்கு மற்றொரு திருப்பத்தைக் கொண்டு வருமா? காலம் தான் பதில் சொல்லும்.

எனவே விறுவிறுப்பான இந்த புதிய தொடரைக் காண21 ஜனவரி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். தெய்வீகமிக்க நாகினி 5-ன் கற்பனை உலகை காணத் தயாராகுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *