Voot App Tamil Programs

சில்லுனு ஒரு காதல் என்ற புதிய நெடுந்தொடர் அறிமுகத்தோடு 2021 ஆம் ஆண்டை ஆர்ப்பாட்டமாக தொடங்கும் கலர்ஸ் தமிழ்

விளம்பரங்கள்

ஜனவரி 4 ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த நெடுந்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது

சில்லுனு ஒரு காதல்
Voot App Tamil Programs

2021 என்ற புத்தாண்டை உற்சாகத்தோடு சிறப்பாக தொடங்கும் வகையில் தமிழ்நாட்டின் மிக இளமையான, பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், சில்லுனு ஒரு காதல் என்ற புதிய நெடுந்தொடர் நிகழ்ச்சியை அதன் பார்வையாளர்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்விக்க தயாராக இருக்கிறது. 2021 ஜனவரி, 4 ஆம் தேதியன்று தனது முதல் ஒளிபரப்பை தொடங்கும் இந்த பிரைம் டைம் நிகழ்ச்சியானது, ஒரு புதுயுக காதல் கதையாகும். ஒரு இளம், நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிக்கும் மற்றும் ஒரு துடிப்பான டீன்ஏஜ் வயது பெண்ணிற்கும் இடையே நிகழும் தினசரி சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளை அழகாக இது சித்தரிக்கிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு இந்த புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

பரபரப்பான ஒரு சிறிய நகரம் சூழலின் பின்னணியைக் கொண்ட சில்லுனு ஒரு காதல் என்ற இந்த நெடுந்தொடர், உயிரோட்டமுள்ள உணர்ச்சிகளும், மென்மையான உணர்வுகளும் நிறைந்ததாக ஆர்வமூட்டும் கதைக்களத்தைக் கொண்டு பயணிக்கிறது. இதன் இரு முக்கிய கதாபாத்திரங்களான நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி சூர்யகுமார் மற்றும் குறும்பும், கேளிக்கையையும் விரும்புகின்ற இளம் பெண்ணான கயல்விழி ஆகியோரின் கண்ணோட்டத்தில் சித்தரிக்கப்படும் கதையான இந்நிகழ்ச்சி, இந்த நவீன யுகத்தில் காணப்படும் உறவுகளின் ஒரு புதிய பரிமாணத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.

முதன்முறையாக பார்த்த உடனேயே சூர்யகுமாருடன் காதலில் விழும் கயல்விழி, அதன்பிறகு அவரோடு தொர்ந்து இருப்பதற்காக தளராத விடாமுயற்சியையும், தேடலையும் மேற்கொள்கிறாள். தனது தீவிர முயற்சியில் வெற்றி காணும் கயல்விழியை சூர்யகுமார் திருமணம் செய்கிறார். குடும்ப வாழ்க்கையைத் தொடங்கும் இந்த இளம் தம்பதியினரின் வாழ்க்கை கிளர்ச்சியும், கொந்தளிப்பும் நிறைந்த திருமண வாழ்க்கையாக அமைகிறது.

கலர்ஸ் தமிழ் – ன் பிசினஸ் ஹெட் திரு. அனூப் சந்திரசேகரன், இப்புதிய நிகழ்ச்சி தொடக்கம் குறித்துப் பேசுகையில், “உலகெங்கிலும் உள்ள எமது பார்வையாளர்களுக்கு நல்ல பொழுபோக்கையும், சிறந்த கதையையும் வழங்குகின்ற ஒரு புதிய நிகழ்ச்சியோடு 2021 என்ற புத்தாண்டை தொடங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்களது பிரைம் டைம் உள்ளடக்கத்திற்கு இந்த நிகழ்ச்சி ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய சேர்க்கையாக இருக்கும். இந்த காலஅளவில் எமது பார்வையாளர்கள் மத்தியில் மென்மையான காதல் மற்றும் ரொமான்ஸ் என்ற பிரிவில் வெளிவரும் நிகழ்ச்சிகள் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கின்றனர். ஒரு வித்தியாசமான கதையை உயிரோட்டமுள்ளதாக கொண்டு வருவதற்காக இந்த நெடுந்தொடரின் நடிகர்களும் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளும் ஓய்வு ஒழிச்சலின்றி கடுமையாக உழைத்திருக்கின்றனர். இந்த நெடுந்தொடரின் நேர்த்தியான சித்தரிப்பு, பார்வையாளர்களை, கதையோடு ஒன்றிணையுமாறு, மெய்மறக்கச் செய்யுமாறு மற்றும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் என்பது நிச்சயம்,” என்று கூறினார்.

விளம்பரங்கள்

ஐபிஎஸ் சூர்ய குமாராக நடிக்கும் நடிகர் சமீர் அஹமது இது பற்றி பேசுகையில், “சில்லுனு ஒரு காதல் என்ற நெடுந்தொடர் மூலம் கலர்ஸ் தமிழ் அலைவரிசையோடு இணைந்திருப்பது எனக்கு பெரும் உற்சாகத்தை தருகிறது. எனது அறிமுக நிகழ்ச்சியிலேயே ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பது ஒரு தனிச்சிறப்பான அனுபவமாகும். இந்த நெடுந்தொடரின் கதையும் மற்றும் நிகழ்வுகளும் மனமதை ஈர்ப்பதாக இருக்கிறது. ஒரு சிக்கலான காதல் கதையில் ஒரு புதிய பரிமாணத்தை இது அழகாக சித்தரிக்கிறது. இதன் தொடக்க நிகழ்விலிருந்தே பார்வையாளர்களால் இந்த நிகழ்ச்சி பெரிதும் வரவேற்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

கயல்விழி என்ற இளம் பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் தர்ஷினி, அவரது அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கையில், “கலர்ஸ் தமிழ் குடும்பத்தின் ஒரு அங்கமாக இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சில்லுனு ஒரு காதல் நெடுந்தொடரில் கயல்விழி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது ஒரு புத்துணர்வூட்டும் அனுபவமாகும். அண்டை வீட்டில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் குணாதிசியங்களை உருவகப்படுத்துவதாக எனது கதாபாத்திரம் அமைந்திருப்பதால் பார்வையாளர்கள் அனைவருமே உடனடியாக அந்த கதாபாத்திரத்தோடு தங்களை எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ள இயலும். எதிர்பாராத திருப்பங்களையும் மற்றும் நிகழ்வுகளையும் இந்த கதை கொண்டிருப்பதால் அடுத்து என்ன நிகழப்போகிறது என்ற ஆர்வப்பெருக்கில் இருக்கையின் முனைகளுக்கே பார்வையாளர்களை இது கொண்டு வரும் என்பது நிச்சயம்.” என்று கூறினார்.

2021 ஜனவரி 4 அன்று தொடங்கி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு உங்கள் மனதில் இடம் பிடிக்கப்போகின்ற சில்லுனு ஒரு காதல் நெடுந்தொடரைக் காண, கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *