பாவம் கணேசன் புதிய மெகா-சீரியல் திங்கட்கிழமை – வெள்ளி 6.30 மணி
ஸ்டார் விஜய் யின் புதிய மெகா-சீரியல் ‘பாவம் கணேசன் ஜனவரி 04 அன்று தொடங்கப்பட்டது. புதிய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை அறிமுகப்படுத்துவதில் ஸ்டார் விஜய் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. நகைச்சுவை மற்றும் குடும்ப நாடக வகைகளில் ஒரு தனித்துவமான கதைக்களத்தைக் கொண்ட மெகா-சீரியல் தான் ‘பாவம் கணேசன்’ தொடர். இந்த சீரியல் ஒரு முழுமையான பொழுதுபோக்கு அம்சமாகும், இது தமிழ்நாட்டின் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என்பது உறுதி.
‘பாவம் கணேசன்’ ஒரு நேர்மையான இளைஞனைப் பற்றிய கதை, கணேசன் மிகவும் அப்பாவி. அதனால் அவரை அவர் அப்பாவித்தனத்தை குறிக்கும் வகையில் ‘பாவம்’ கணேசன் என்று அழைக்கிறார்கள். அவர் உண்மையில் கடின உழைப்பாளி மற்றும் நம்பிக்கையுள்ள நபர்; அனைவருக்கும் நிபந்தனையின்றி உதவவும் நேசிக்கவும் தெரிந்தவர். அவர்தான் தன குடும்பத்தை கட்டிக்காக்கும் ஒரே தலை மகன். பொறுப்புகளை நிர்வகிக்க கடுமையாக பாடுபடும் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் சூழ்நிலைகளும் ஏராளம்.
இவ்வளவு தியாகங்களைச் செய்யும் அவர் தனது குடும்பத்தையும் காப்பாற்றி தானும் மகிழ்ச்சியுடன் வாழமுடியுமா என்பதுதான் நடைச்சுவை நிறைந்த குடும்ப கதை பாவம் கணேசன்.
கணேசன் கதாபாத்திரத்தில் கலக்கப்போவது யார் புகழ் நவீன் நடிக்கிறார். நவீன் ஸ்டார் விஜய்யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான கலக்கபோவத்து யாரு சீசன் 5 இல் பங்கேற்றார், மேலும் அவர் ஒரு சிறந்த மிமிக்ரி கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பாவம் கணேசன்’ திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நடிப்பில் கே.பி.ஒய் நவீன் முரளிதர், அனிலா, நேத்ரான் மற்றும் பலர் நடிக்கின்றனர்.