வைஃப் கைல லைப் – விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு
வைஃப் கைல லைப், விஜய் தொலைக்காட்சியில் முற்றிலும் புதுமையான நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது. வைஃப் கைல லைப் இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 15 முதல் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.இந்த நிகழ்ச்சியின் தலைப்பிற்கு ஏற்ப, இந ்த நிகழ்ச்சி முற்றிலும் ஜோடிகள் கலந்துகொள்ளும் அட்டகாசமான கேம் ஷோ. இந்த நிகழ்ச்சியில் மனைவிக்கு ஒரு டாஸ்க் வழங்கப்படும் அது அவர்களின் அறிவாற்றல் அல்லது பொறுமையை சோதிக்கும் வகையில் அமையும்.
எல்லா வாரமும் இந்த நிகழ்ச்சியில் மூன்று ஜோடிகள் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் மனைவிக்கு வழங்கப்படும் டேஸ்க்கை அவர் செய்து முடிக்க வேண்டும், அப்படி செய்து முடிக்க தவறினால் அவரின் கணவருக்கு கேளிக்கையாக ஒரு தண்டனை வழங்கப்படும் வழங்கப்படும். தலைப்பிற்கு ஏற்ப இதுவே வைஃப் கைல லைப் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்போவது யார் தெரியுமா சமீபத்தில் நடந்த கலக்க போவது யாரு சீஸனின் வெற்றியாளர் அசார் அவர்களும், அவருடன் நம் சரவணன் மீனாட்சி மற்றும் ரெடி ஸ்டெடி போ புகழ் ரியோ தொகுத்துவழங்கப்போகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கினால் நகைச்சுவைக்கும், பொழுதுபோக்கும் பஞ்சமில்லை. இந்த நிகழ்ச்சியில் நட்சத்திர ஜோடிகள் மட்டுமல்லாமல் சாமானிய ஜோடிகளும் பங்கேற்பார்கள். இனி கணவன்மார்களுக்கு மனைவிமார்களும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கப்போகிறது இந்த வைஃப் கைல லைப்.
.