விஜய் தமிழ் புத்தாண்டு 2018 – சிறப்பு நிகழிச்சிகள் – 14 ஏப்ரல்

விளம்பரங்கள்

தமிழ் ஆண்டின் முதல் நாளாக கொண்டாடப்படும் நாள் ஏப்ரல் 14. இந்த ஆண்டு அனைவருக்கும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் பொங்கிவர விஜய் தொலைக்காட்சியின் வாழ்த்துக்கள். அந்த இனிய நாளை இனிதாக தொடங்க விஜய் தொலைகாமாட்சியின் நிகழ்ச்சிகளை பாருங்கள். எந்த ஒரு சிறப்பு நாளும் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி இல்லாமல் முழுமையடையாது. இந்த தமிழ் புத்தாண்டின் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சியை தவறாமல் பாருங்கள் காலை 9 மணிக்கு. இந்த பட்டிமன்றத்தில் தலைப்பு பாரம்பரியம் சுகமா?! சுமையா? இதன் நடுவராக சுகி சிவம் அவர்கள் பேச வருகிறார். இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் திரைப்படமான வேலைக்காரன் திரைப்படம் முதன் முதலாக ஒளிபரப்பாகவுள்ளது.

ஒரு சமூக கருத்தை மையமாக கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சேல்ஸ் ஊழியராக சிறப்பாக நடித்துள்ளார் இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் நடிகை நயன்தாரா, மலையாள நடிகர் ஃபஹாத் பாசில், சினேகா, பிரகாஷ் ராஜ், RJ பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். காலை 10 மணிக்கு இந்த திரைப்படத்தை தவறாமல் பாருங்கள். மேலும் ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் துப்பறிவாளன் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது இந்த திரைபடத்தில் நடிகர் விஷால் இதுவரை இல்லாதொரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் மேலும் நடிகர் பிரசன்னா, அணு இமானுவேல், ஆண்ட்ரியா, வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை மதியம் 1.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

விளம்பரங்கள்

மேலும், இந்த தமிழ் புத்தாண்டில் சிறப்பான ஆரம்பமாக நடனப்புயல் பிரபுதேவா அவர்கள் சூப்பர்சிங்கர் இசை அரங்கை சூறையாட வருகிறார். நடன புயல் அவர்கள் நம் போட்டியாளர்களின் பெர்பாமென்சுகளை கண்டுகளித்ததோடு அவரின் சில அசத்தல் டான்ஸ் மூவ்ஸ்களையும் காணத்தவறாதீர்கள். நடுவர் பென்னி தயால் அவர்களின் சிறப்பான பெர்பாமன்ஸையும் தவறாமல் பாருங்கள். நடிகர் பிரபு தேவா அவர்களுடன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களும், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களும் கலந்துகொள்கின்றனர். இந்த அதிரடி இசையும் நடனமும் கலந்த இந்த சூப்பர் சிங்கர் எபிசோடை மாலை 5 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

அருவி என்னும் தைரியமான இளம் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் மாறுதல்களும் உணர்ச்சிகளையும் அழகாக சித்தரித்த படம் அருவி. இந்த திரைப்படத்தில் அருவியாக நடிகை அதிதி பாலன் நடித்துள்ளார். மேலும் இதை அருண் பிரபு புருரஷோத்தமன் இயக்கியுள்ளார். பலரின் பாராட்டுகளை பெட்ர திரைப்படம் அருவி. அருவியை இரவு 8 மணிக்கு தவறாமல் பாருங்கள். இந்த புத்தாண்டை இனிதாக தொடங்குங்கள் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை கண்டு.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *