குக்கு வித் கோமாலிஸ் நவம்பர் 16 முதல் இரவு 8 மணிக்கு
சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு விஜய் டிவி குக்கு வித் கோமாலிஸ்
விஜய் டிவியில் மேலும் ஒரு புத்தம் புதிய நிகழ்ச்சி அறிமுகமாகிறது. குக்கு வித் கோமாலிஸ்! இந்த நிகழ்ச்சி முற்றிலும் நகைச்சுவை கலந்த ஒரு சமையல் நிகழ்ச்சியாகும். வரும் நவம்பர் 16 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.
சமையலில் தேர்ச்சி பெற்ற பிரபலங்கள் சமையலில் எதுவும் தெரியாத கோமாளிகளுடன் சமைக்க வேண்டும். இரண்டு நபர்களும் சேர்ந்து சமைக்கும் சமையல் அறையில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் வனிதா விஜயகுமார், நடிகை ரேகா, ரம்யா பாண்டியன், ஞானசம்பந்தம், மோகன் வைத்தியா, உமா ரியாஸ், தாடி பாலாஜி பிரியங்கா ரோபோ சங்கர் .
கோமாளிகளாக பிஜிலி ரமேஷ், மணிமேகலை, டைகர் தங்கதுரை, பப்பு, சக்தி, புகழ், ஷிவாங்கி மற்றும் பாலா.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் ரக்ஷன் மற்றும் நிஷா.