கலக்க போவது யாரு 7 – சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8.30 மணிக்கு
தமிழ் ரியாலிட்டி ஷோக்கள் – கலக்க போவது யாரு 7
விஜய் தொலைக்காட்சியின் மிக பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி கலக்க போவது யாரு. இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகர்கள் மற்றும் பல நட்சத்திரங்கள் வருகை தந்திருக்கின்றனர். ஆனால் முதல் முறையாக நமது தமிழ் அரசியில் பிரபலங்கள், நமது காமெடி அரசியல் சுற்றுக்கு வருகை தருகின்றனர்.
அவர்கள் வேறு யாருமல்ல நாஞ்சில் சம்பத் அவர்களும் சீமான் அவர்களும். ஆமாம் இந்த வாரம் நமது கலக்க போவது யாரு போட்டியாளர்கள், காமெடி அரசியல் சுற்றில் இவர்கள் முன் பெர்பாம் செய்யவுள்ளனர். இந்த வாரம் இதுவரை கண்டிராத சிரிப்பு விருந்தை நம் போட்டியாளர்கள் கொடுக்கவுள்ளனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் ரக்ஷன் மற்றும் ஜாக்குலின், இவர்கள் இதுவரை போட்டியாளர்களோடு பங்கேற்று நம்மை பல முறை சிரிக்க வைக்கவும் செய்தனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக மகேஷ், Mimicry சேது, பிரியங்கா மற்றும் நடிகை ஆர்த்தி பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8.30 மணிக்கு உங்கள் விஜய் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.